பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள்! தேர்வுத்துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு

கடந்த 22-ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள்! தேர்வுத்துறை இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: January 28, 2019, 4:16 PM IST
  • Share this:
பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கும் என்று தேர்வுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது

அதனால், மாநிலத்தின் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் தவித்துவருகின்றனர். ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பிளஸ் 2  மாணவர்களுக்கு அறிவித்தபடி, பிப்ரவரி 1-ம் தேதி செய்முறைத் தேர்வு நடைபெறுமா அல்லது தேர்வு தேதி மாற்றப்படுமா என்று கேள்வி எழுந்தது. இந்தநிலையில், தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


அதில், ‘ பிளஸ் 2  மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பிப்ரவரி 1-ம் தேதி செய்முறைத் தேர்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிளஸ் 1 மாணவர்களுக்கும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் அடுத்தடுத்து செய்முறைத் தேர்வு தொடர்ச்சியாக நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see:

First published: January 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்