முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 24 மணி நேரத்தில் ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பாக மாற்ற தமிழக அரசு அதிரடி உத்தரவு

24 மணி நேரத்தில் ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பாக மாற்ற தமிழக அரசு அதிரடி உத்தரவு

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் போடப்பட்டு, பயன்படாத நிலைக்கு மாறிய ஆழ்துளைக் கிணறுகள், திறந்தவெளிக் கிணறுகள், நீர் உறிஞ்சுக் கிணறுகள் ஆகியவற்றை 24 மணி நேரத்தில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பாக மாற்ற வாரிய பொறியாளர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் வெளியிட்டுள்ள உத்தரவில், மேற்படி செயல்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மழை நீர் சேகரிப்புக்கென உருவாக்கப்பட்டுள்ள குடிநீர் வடிகால் வாரிய இணையதளத்திலோ, சமூக வலைதள பக்கங்களிலோ அணுகி உரிய வழிகாட்டு தகவல்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக்கிணற்றை மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக மாற்றுவதற்கு எந்த வகையான தொழில்நுட்ப உதவியையும் குடிநீர் வடிகால் வாரியம் செய்யும் என்றும், நேரடியாகவோ, 9445802145 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என்றும் மகேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

First published:

Tags: Borewell Hole