ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனுக்கு முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனுக்கு முன்ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

வேணு சீனிவாசன்

வேணு சீனிவாசன்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலையில் இருந்த பூவுக்கு பதிலாக பாம்பு உள்ளதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது.

  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள மயில் சிலையில் இருந்த பூவுக்கு பதிலாக பாம்பு உள்ளதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆகம விதிகளுக்கு எதிராக சிலை மாற்றப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

  இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்கக் கோரி இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், கோவில் அறங்காவலரும், டிவிஎஸ் குழுமத் தலைவருமான வேணுசீனிவாசன், ஸ்தபதி முத்தையா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.

  இதில் திருமகளுக்கு முன் ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அவருக்கு எதிராக அர்ச்சகரும், இரு அதிகாரிகளும் வாக்குமூலம் அளித்துள்ளதை சுட்டிக்காட்டி முன்ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. அதேநேரம் வேணுசீனிவாசன், ஸ்தபதி முத்தையா ஆகியோருக்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மனு செய்யலாம் என்றம் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

  Also watch

  Published by:DS Gopinath
  First published:

  Tags: TVS, Venu Srinivasan