முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Sterlite | ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி விரைவில் தொடங்க அரசு உதவ வேண்டும்: ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

Sterlite | ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி விரைவில் தொடங்க அரசு உதவ வேண்டும்: ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன்  உற்பத்தியை விரைவாக தொடங்கிட தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என ஆலை  ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

  • Last Updated :

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன்  உற்பத்தியை விரைவாக தொடங்கிட தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என ஆலை  ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.  கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்குவதில் முக்கிய பங்காற்றும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவிவருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடியில் சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிகமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.  மின்சார இணைப்பு வழங்கப்படாமல் உள்ளதால் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படாமல் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை விரைவில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்ததாரர்கள் சங்கம், மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம், இந்து வணிகர் சங்கம், இந்து மக்கள் கட்சி உளள்ளிட்டவை சார்பில் தூத்துக்குடியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது  செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள்,  நாடு  முழுவதும்  கொரோனா தொற்று எண்ணிக்கை  உயர்ந்து , ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பது  அதிகரித்து வருகிறது.  இத்தகைய சூழலில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். . ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சார இணைப்பு வழங்கி ஆக்சிஜன் தயாரிப்பதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Corona, Covid-19, Oxygen, Sterlite, Tuticorin