குடும்ப வறுமையைப் போக்க பனையேறும் தொழிலில் ஈடுபடும் 17 வயது சிறுவன்

கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவிக்கும் தனது குடும்பத்திற்கு உதவ 11-ம் வகுப்பு முடித்த மாணவர் ஒருவர் பனையேறும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கங்குளம் அருகே அரசன்குளத்தைச் சேர்ந்த உப்பு வியாபாரி பாலகிருஷ்ணனின் மகன் பெருமாள். 11-ம் வகுப்பை முடித்துவிட்டு, பள்ளித் திறப்பிற்காக காத்திருக்கும் இந்த 17 வயது சிறுவன் தான், குடும்ப பாரத்தை தனது தோளில் சுமந்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கால் போதிய வருமானம் கிடைக்காமல் தந்தை தவிப்பதை அறிந்த பெருமாள், தாத்தா தனக்கு கற்றுக் கொடுத்த பனையேறும் தொழிலை கையிலெடுத்தார். காலை 5 மணிக்கெல்லாம் பனை ஏறத் தொடங்கும் இவர், ஒவ்வொரு மரத்திலும் பதநீரை சேகரிக்கிறார். இவருக்கு உதவி செய்பவர் 8-ம் வகுப்பு படிக்கும் தங்கை கண்ணகி. சேகரிக்கும் பதநீரை காய்ச்சும் இடத்திற்கு கொண்டு சென்று கருப்பட்டி காய்ச்ச உதவுகிறார். தயார் செய்யும் கருப்பட்டியை விற்பதன் மூலம் நாள்தோறும் குடும்பத்தை நடத்துவதற்கு தேவையான பணம் கிடைப்பதாக கூறுகிறார் பெருமாள்.

பள்ளி திறக்காததால், அண்ணனுக்கு உதவி செய்வதாக கூறும் கண்ணகி, இதனால் குடும்பமே மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார். குடும்ப கஷ்டத்தைப் போக்க மகன் செய்து வரும் பனையேறும் தொழிலால், ஓரளவு குடும்பம் நிம்மதியாக இருப்பதாக கூறுகிறார் அவரது தாய் கோசலை.


குடும்பத்திற்கு உதவி செய்வதற்காக உயிருக்கு ஆபத்தான தொழிலை செய்து வரும் இந்த மாணவர் உண்மையில் பாராட்டுக்குரியவரே.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading