தூத்துக்குடி: 18 நாட்களாகியும் வீடுதிரும்பாத மகள்.. கண்டுபிடித்துத் தரக்கோரி பெற்றோர்கள் தர்ணா

காணாமல்போன தம் மகளை கண்டுபிடித்துத் தரக்கோரி பெற்றோர்கள் தர்ணா..

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே காணாமல் போன தம் மகளை கண்டுபிடித்துத் தரக்கோரி அரூர் காவல் நிலையம் முன்பு பெற்றோரும் உறவினர்களும் தர்ணா போராட்டம் நடத்தினர்.

 • Share this:
  தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த அச்சல்வாடி பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். அவரது மகள் அபி (17) அரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்புப் படித்து வந்தார். கடந்த மாதம் 24ம் தேதி அதிகாலை 4 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காகச் சென்ற பெண் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அப்பெண்ணின் பெற்றோரும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

  அவ்வாறு தேடியும் தம் மகள் கிடைக்காததால் அரூர் காவல் நிலையத்தில் கடந்த 24ம் தேதி புகார் அளித்தனர். அந்தப் புகார் மனுவில், தங்கள் பகுதியைச் சேர்ந்த முருகனின் மகன் பூவரசன் (19) தங்களின் மகள் அபியைக் கடத்திச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

  பள்ளி மாணவியான அபி காணாமலாகி இன்றுடன் 18 நாட்கள் ஆவதாகக் கூறிய பெற்றோர், இதுவரை அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினர் தன் மகளைத் தேடும் பணியில் மெத்தனம் காட்டி வருகின்றனர் என்றும் கூறி, அரூர் காவல் நிலையம் முன்பு  உறவினர்களுடன் சேர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: