தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!

தமிழிசை சவுந்தரராஜன்

தூத்துக்குடி விமான நிலையத்தில் மாணவி சோபியாவை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்ய தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடந்த மாதம் 3-ம் தேதி நெல்லை மாவட்டம், தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு நேற்று விமானத்தில் சென்றார்.

அதே விமானத்தில், கனடாவில் உள்ள மாண்ட்ரியல் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப்படிப்பு படித்துவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற மாணவியும் பயணித்துள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் சோபியா, தனது கைகளை உயர்த்தி, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இதனால், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து  மகளிர் காவல் நிலையத்தில் தமிழிசை புகார் அளித்தார்.

மாணவி சோபியா


சோபியா மீது மூன்று பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கைது செய்தனர். பின்னர், ஜாமினில் அவர் விடுவிக்கப்பட்டார்.

தன்னை தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜகவினர் மிரட்டியதால் அவர்களை பெண்கள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என சோபியாவின் தந்தை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில், தமிழிசை சவுந்தர ராஜன் மீது இ.த.ச.341,294 (b), 506 ( 1 ) மற்றும் பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வதை தடுப்புச் சட்டம் ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யவும், அதன் அறிக்கையை அடுத்த மாதம் 20-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் போலீசாருக்கு நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்..

கடன் தர மறுத்தவரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த நண்பர்கள்!

காவல்நிலையம் எதிரே இருக்கும் நகைக்கடையில் 2 கிலோ தங்கம் கொள்ளை!

Also See...

Published by:Sankar
First published: