' பொங்கல் தொகுப்பில் மஞ்சள் குலையும் இணைக்க வேண்டும்' - நெல்லை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

' பொங்கல் தொகுப்பில் மஞ்சள் குலையும் இணைக்க வேண்டும்' - நெல்லை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை

மஞ்சள் குலை

தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில், மஞ்சள் குலையும் வழங்க வேண்டுமென, நெல்லையைச் சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 • Share this:
  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதார்களுக்கு 2 ,500 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் , தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்திராட்சை உடன் 2 ,500 ரூபாய் வழங்க 5,604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 18,923 இலங்கை தமிழர்கள் மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கும் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் , நெல்லை மாவட்டத்தில் பொட்டல், அருகன்குளம், பாறையடி சாலியர் தெரு, மேலசெவல் உள்ளிட்ட இடங்களில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அமோகமாய் விளைந்திருக்கும் நிலையில், மஞ்சள் குலையை வாங்க வியாபாரிகள் வராதது விவசாயிகளை கவலை கொள்ள வைத்துள்ளது.

  எனவே அரசு தங்களிடம் கொள்முதல் செய்து, பொங்கல் தொகுப்பில் இணைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: