காதல் கண்ணை மறைத்தது... காதலன் இச்சைக்கு மாணவிகளை இரையாக்கிய டியூஷன் மிஸ்...!

வேலைக்கு செல்லாத பாலாஜி, சஞ்சனாவை பயன்படுத்தி மாணவிகளிடம் பணம் பறிக்க திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.

காதல் கண்ணை மறைத்தது... காதலன் இச்சைக்கு மாணவிகளை இரையாக்கிய டியூஷன் மிஸ்...!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: November 7, 2019, 11:49 AM IST
  • Share this:
காதலுக்காக தன்னிடம் டியுசன் படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்த ஆசிரியை மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் 28 வயதான சஞ்சனா என்பவர் வீட்டியே டியூஷன் சென்டர் நடத்தி வந்துள்ளார். இவரிடம் 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

சஞ்சனாவுடன் சேர்ந்து அவரது நண்பர் பாலாஜி டியூசனுக்கு வரும் மாணவிகளை தனி அறையில் வைத்து, ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.


இந்த தகவல் தெரிய வந்த மாணவி ஒருவரின் பெற்றோர் நேற்று முன்தினம் பாலாஜி மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பாலாஜி மற்றும் டியூசன் ஆசிரியை சஞ்சனாவை கைது செய்து விசாரணை செய்தனர்.

தன்னிடம் படிக்கும் மாணவிகளுடன் தனிமையில் இருக்க ஏற்பாடு செய்தால் மட்டுமே தன்னை காதலிப்பதாக பாலாஜி கூறியதாகவும், அதற்காக மாணவிகளை இ.சி.ஆர் சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்று ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாகவும் சஞ்சனா வாக்குமூலம் அளித்துள்ளார்.

Loading...

அந்த புகைப்படத்தை வைத்துக் கொண்டு மாணவி ஒருவரை பாலாஜி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சஞ்சனா கூறியுள்ளார்.

வேலைக்கு செல்லாத பாலாஜி, சஞ்சனாவை பயன்படுத்தி மாணவிகளிடம் பணம் பறிக்க திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பாலாஜி மற்றும் ஆசிரியை சஞ்சனாவை போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Also see...

First published: November 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com