ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

"அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால்...” - துக்ளக் விழாவில் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு

"அரசியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால்...” - துக்ளக் விழாவில் குருமூர்த்தி பரபரப்பு பேச்சு

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

சினிமா ஸ்டாரின் ரசிகர்கள் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நிலை உள்ளது. நான் நடத்திய ஆய்வில் ஜாதி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக விளங்கி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில், துக்ளக் பத்திரிகையின் 53-ஆவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாஜக தலைவர் அண்ணாமலை, பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, ''மோடியின் தொடர் வெற்றிக்கு காரணம் அவரது அயராத உழைப்பு. ஆனால் அவர் வெளியில் சொல்வதில்லை. இப்போதெல்லாம் திடீர் என அரசியல்வாதியாக வருகின்றனர். தமிழகத்தில் லஞ்சம் இல்லாத ஆட்சி வேண்டும் என்றால் மோடி போன்ற ஒருவர்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என சோ கூறுவார். ” என்றார்.

பெண்கள் அரசியல் வருவதற்கு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், “பெண்கள் அரசியலுக்கு வருவது தவறில்லை. ஆனால் இத்தனை சதவிகிதம் என வகுக்க முடியாது. தகுதியான பெண்கள் அரசியலுக்கு வரலாம். ஆனால் இவ்வளவு இடங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும் என இருந்தால், அரசியலில் தகுதி இல்லாதவர்களும் நுழைய வாய்ப்புள்ளது.  ஏனென்றால் ஒரு காலத்தில் அரசு அலுவலங்களில் பெண் அதிகாரிகள் லஞ்சம் எதையும் வாங்க மாட்டார்கள். ஆனால் தற்போது சிலர் டிமாண்ட் செய்து கேட்கும் நிலை உள்ளது. மேலும் ஏனென்றால் அவர்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. பெண்கள் குடும்பத்தை கவனிப்பதால்தான் நம் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. ” என்றார்.

நிதிஷ் குமாரின் மோடி எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த குருமூர்த்தி,  “நீங்கள்தான் பிரதமர் ஆகவேண்டும் என யாரோ ஆசையை விதைத்ததன் காரணமாக நிதிஷ் குமார் மோடிக்கு எதிராக செயல்பட்டு பின்னர் ராமதாஸ் போல ஆகிவிட்டார்”என்றார்.

அண்ணாமலை பத்திரிகையாளர் மோதல் பற்றிய வாசகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த குருமூர்த்தி, “ அண்ணாமலையை பத்திரிகையாளர்கள் இம்சை செய்கிறார்கள் என்றால் அவர் வளர்ந்து வருகிறார் என்றுதான் பொருள். எதிர்ப்பில்தான் அனுபவம் வரும். கஷ்டப்பட்டால்தான் அனுபவம் வரும். எனவே அண்ணாமலைக்கு அந்த அனுபவம் வரட்டும். அவருக்கு தொடர்ந்து எதிர்ப்பு வரட்டும். அதை நான் வரவேற்கிறேன். மாண்புமிகு என்ற சொல் எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியாது. அவர் மாண்புமிகு என்று இல்லாமல் அந்த இடத்திற்கு போக வேண்டும் என விரும்புகிறேன். அண்ணாமலை தனிப்பட்ட வளர்ச்சியை விட அவருக்கு பின்னால் இருக்கும் சித்தாந்தம் வளர வேண்டும். அந்த நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டு வருகிறது என்று பேசினார்.

First published:

Tags: Annamalai, Auditor Gurumoorthy, Dr Ramadoss