Home /News /tamil-nadu /

சபாநாயகர் நோட்டீசுக்கு தடை கோரி அதிமுக எம்.எல்.ஏ பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனு!

சபாநாயகர் நோட்டீசுக்கு தடை கோரி அதிமுக எம்.எல்.ஏ பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனு!

எம்.எல்.ஏ., பிரபு

எம்.எல்.ஏ., பிரபு

சபாநாயகர் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று நேற்று சட்டசபை செயலகம் சென்று பிரபு கோரிக்கை விடுத்தார்.

  • News18
  • Last Updated :
    சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீசுக்கு தடை கோரி கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதால், ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.

    இதனை எதிர்த்து, ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இவ்விவகாரத்தில், சபாநாயகரின் நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

    ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர் மட்டுமே உச்ச நீதிமன்றம் சென்றதால், இந்த உத்தரவு அவர்களுக்கு மட்டும் பொருந்துமா இல்லை, பிரபுவுக்கும் பொருந்துமா என்ற குழப்பம் நிலவியது.

    எனினும், சபாநாயகர் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று நேற்று சட்டசபை செயலகம் சென்று பிரபு கோரிக்கை விடுத்தார்.

    அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவு தனக்கும் பொருந்தும் என்று செயலர் கூறியதாக பிரபு தெரிவித்திருந்தார். எனினும், அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யாததால் அந்த உத்தரவு பிரபுவுக்கு பொருந்துமா? என்ற குழப்பம் இருந்தே வந்தது.

    இதனால், பிரபு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கலைச்செல்வன், ரத்தின சபாபாதி மனுவுடன் தன்னை இணைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Published by:Sankar
    First published:

    Tags: ADMK, TTV Dhinakaran

    அடுத்த செய்தி