300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை? - டிடிவி ஆவேசம்

தமிழகத்தில் பல பூத்துகளில் அம்மா மக்கள் கழகத்திற்கு ஜூரோ வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Web Desk | news18
Updated: May 26, 2019, 12:33 PM IST
300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டுகூட பதிவாகவில்லை? - டிடிவி ஆவேசம்
டிடிவி தினகரன்
Web Desk | news18
Updated: May 26, 2019, 12:33 PM IST
தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை என்று தமக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்திருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான 3 நாட்களுக்கு பின் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,மாபெரும் வெற்றியை எதிர்பார்த்ததாகவும், அது கிடைக்காமல் போனதற்கான காரணம் போக போக தெரிய வரும் என்றார்.

”தான் வாக்களித்த பூத்தில் அமமுகவிற்கு 14 ஓட்டுகள்தான் பதிவாகி உள்ளது என குறிப்பிட்ட டிடிவி தினகரன், தனது குடும்பத்தினர், நண்பர்களே 100 பேர் இருக்கிறார்கள்.. அவர்களின் ஓட்டு எங்கே போனது என வினவினார்.

ஏன், அமமுக பூத் ஏஜண்டுகள்கூட வாக்களிக்கவில்லையா என கேள்வி எழுப்பிய அவர், இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாடவிருப்பதாகவும் கூறியுள்ளார்”.

Also Watch: Video | சாலையின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த கேபிளால் விபரீதம்… இளைஞர் உயிரிழப்பு…!

First published: May 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...