• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் டாஸ்மாக் கடை திறப்பது மிக மோசமான முடிவு... டிடிவி தினகரன்

சென்னையில் டாஸ்மாக் கடை திறப்பது மிக மோசமான முடிவு... டிடிவி தினகரன்

டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

கொரோனா பாதிப்பின் வீரியம் குறையாத நிலையில், சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படுவது மிக மோசமான முடிவு என்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இ-பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்த பிறகும், அதனை ரத்து செய்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று காரனம் கூறி வரும் தமிழக அரசு, இப்போது எப்படி மதுக்கடைகளை திறந்துவிட முடிவெடுத்தது என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.



    சென்னைக்கு வெளியே ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பரவல், மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு பிறகுதான் வேகமெடுத்தது என்பது தெரிந்திருந்தும் இப்படி முடிவெடுப்பது துளியும் மனசாட்சி இல்லாத செயல் என்று சாடியுள்ளார்.

    Also read... சென்னையின் பிரதான பகுதிகளில் நாளை (18-08-2020) மின்தடை அறிவிப்பு - உங்கள் பகுதியை செக் பண்ணிக்கோங்க...



    மக்கள் எப்படி வேண்டுமானலும் போகட்டும்; அரசுக்கு வருமானம் வந்தால் போதும் என்ற ஆட்சியர்களின் எண்ணத்தை ஏற்க முடியாது என்று கூறியுள்ள தினகரன், சென்னையில் கொரோனா பாதிப்பை அதிகப்படுத்தும் ஆபத்து நிறைந்த டாஸ்மாக் திறப்பு முடிவை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: