Home /News /tamil-nadu /

ஆளுநர்- முதலமைச்சர் சந்திப்பு... நாடகம் ஆடுகிறதா திமுக: டிடிவி தினகரன் கேள்வி

ஆளுநர்- முதலமைச்சர் சந்திப்பு... நாடகம் ஆடுகிறதா திமுக: டிடிவி தினகரன் கேள்வி

முதல்வர்- ஆளுநர் சந்திப்பு

முதல்வர்- ஆளுநர் சந்திப்பு

நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப கோரியே இந்த சந்திப்பு நடந்ததாக முதலமைச்சர் தரப்பு தெரிவிக்க, அதைப்பற்றியே கண்டுகொள்ளாமல் கொரோனா குறித்து விவாதித்ததாக ஆளுநர் மாளிகை கூறியிருக்கிறது. எது உண்மை என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    தமிழக ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக இருவேறு தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கம்போல் திமுக நாடகம் ஆடுகிறதா என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர். ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், கடந்த செப்டம்பர் 13-ந் தேதி தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வடிவுக்கு, 2 மாதங்களுக்கு மேலாகியும் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்படுவது தொடர்பாகவும்,  விரைவில் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதேவேளையில், ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெள்ள பாதிப்பு தொடர்பாகவும், கொரோனா குறித்தும்  இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பும் இருவேறு காரணங்களை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இது தொடர்பாக  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எது உண்மை? தமிழக ஆளுநரை, முதலமைச்சர் சந்தித்து எதைப் பற்றி பேசினார் என்பது குறித்து ஆளுநர் மாளிகை ஒருவிதமாகவும், முதலமைச்சர் அலுவலகம் வேறுவிதமாகவும் செய்தி வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் விடாமல் பெய்யும் மழை: இதுவரை 105 பேர் பலி.. மீட்பு பணியில் 54 படகுகள்!


    நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப கோரியே இந்த சந்திப்பு நடந்ததாக முதலமைச்சர் தரப்பு தெரிவிக்க, அதைப்பற்றியே கண்டுகொள்ளாமல் கொரோனா குறித்து விவாதித்ததாக ஆளுநர் மாளிகை கூறியிருக்கிறது. அப்படி என்றால் உண்மை என்ன?

    'ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்து விடுவோம்' என்று தேர்தலுக்கு முன் ஏமாற்று வசனம் பேசிய தி.மு.க, அதனை செய்ய முடியாததால், இப்போது தமது வழக்கப்படி நாடகமாடுகிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    மேலும் படிங்க: Fact Check: செங்கல்பட்டில் வெள்ளமா.? பரவும் வீடியோவில் உள்ள உண்மை என்ன?

    Published by:Murugesh M
    First published:

    Tags: MK Stalin, TTV Dhinakaran

    அடுத்த செய்தி