தினகரன் அதிமுகவினரின் ரத்தத்தை உறிஞ்ச நினைக்கிறார்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பல நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் சாத்தூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பொதுமக்களிடம் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்தார்.

தினகரன் அதிமுகவினரின் ரத்தத்தை உறிஞ்ச நினைக்கிறார்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
  • News18
  • Last Updated: April 17, 2019, 9:51 AM IST
  • Share this:
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்தும் சாத்தூர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளரை ஆதரித்தும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டார்.

அப்போது, நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் சாத்தூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “ திவாகரன் மிகவும் நல்ல மனிதர். இந்த கட்சி உடையக் கூடாது என்று விரும்பியதில் திவாகரனும் ஒருவர்.


தினகரன் கட்சியில் அதிமுகவினர் யாரும் இணைய மாட்டார்கள். அவர் சுயநலவாதி அதிமுகவினரின் ரத்தத்தை உறிஞ்ச நினைக்கிறார். அது நடக்காது.

யார் வீட்டுக்குப் போவார்கள், யார் கோட்டைக்குப் போவார்கள் என்று தேர்தல் முடிவுகள் வந்ததும் தெரிந்துவிடும். அதிமுக பெரும்பான்மையுடன் கோட்டையில் இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இலவு காத்த கிளி போல் போகப்போகிறார் “ என்று பேசினார்.

மேலும் அவர் டிடிவி தினகரன் நாட்டு மக்களின் துரோகி என்றும் அவர் குறிப்பிட்டுப் பேசினார். மோடியுடனான கூட்டணி குறித்துக் கேட்ட போது “பாஜக தலைவர் என்றால் மோடி தான். மற்றவர்களைத் தலைவர் என்று கூறமுடியாது. மோடி நினைத்தால் தலைவர்களாக உலா வரலாம். மோடி மறுத்தால் தொண்டர்களாக உலாவரலாம் “ என்று பேசினார்.எட்டு வழிச்சாலைத் திட்டம் குறித்துக் கேட்ட போது ” எட்டு வழிச் சாலை திட்டம் குறித்து, முதல்வர் தான் முடிவு எடுப்பார். முதல்வரை மீறியோ அல்லது முதலமைச்சர் மறுத்தாலோ அந்த திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாது” என்று பேசினார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: April 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading