முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஓபிஎஸ் திருந்திவிட்டார்.. இபிஎஸ் அக்மார்க் சுயநலவாதி - டிடிவி தினகரன் சாடல்

ஓபிஎஸ் திருந்திவிட்டார்.. இபிஎஸ் அக்மார்க் சுயநலவாதி - டிடிவி தினகரன் சாடல்

டிடிவி - தினகரன்

டிடிவி - தினகரன்

TTV Dinakaran | ஓ.பன்னீர்செல்வம் தவறை உணர்ந்து மனம் திருந்திவிட்டார், ஆனால் எடப்பாடி பழனிசாமி திருந்த வாய்ப்பே இல்லை என்றும்  மறைமுகமாக அவரை விமர்சனம் செய்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளது என்று எடப்பாடி பழனிசாமியை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். அமமுக தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில், அமமுகவுக்கு தலைவரை தேர்ந்தெடுப்பது, பேரறிவாளனை போல மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுவிக்க கோரிக்கை, மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் பொதுக் குழு கூட்டத்தில்  பேசிய டிடிவி தினகரன், அதிமுக ஒரு அக்மார்க் சுயநலவாதியிடம் சிக்கி உள்ளதாக பழனிசாமி குறித்து மறைமுகமாக கூறினார்.சொந்த காட்சியிலேயே பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை காசு கொடுத்து வாங்கும் கேவலமான நிலையில் அதிமுக உள்ளது என்றார். பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு மட்டுமே என்று கூறிவிட்டு அவருக்கும் டிடிவி தினகரன் துரோகம் செய்து விட்டார் என பழனிசாமி மீது குற்றம்சாட்டினார்

ஓ.பன்னீர்செல்வம் தவறை உணர்ந்து மனம் திருந்திவிட்டார், ஆனால் எடப்பாடி பழனிசாமி திருந்த வாய்ப்பே இல்லை என்றும்  மறைமுகமாக அவரை விமர்சனம் செய்தார். தலைவர் பதவியை ஏன் நிரப்பவில்லை என்று தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியதால் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

First published:

Tags: AMMK, TTV Dinakaran