அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் வந்த சசிகலா - விளக்கமளித்த டிடிவி தினகரன்!

அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் வந்த சசிகலா - விளக்கமளித்த டிடிவி தினகரன்!

டி.டி.வி.தினகரன்

அதிமுகவின் மூன்று வங்கி கணக்குகளையும் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கையாள்வதற்கு தடை விதிக்குமாறும் கோரினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் சசிகலா வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாகவும், அதனால் தங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

சசிகலா சிறைக்கு சென்ற பின்பு, 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர், சசிகலாவும், டிடிவி தினகரனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், அம்மா மற்றும் புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரில் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டமும், அதில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் செல்லாது என அறிவிக்க கோரியிருந்தனர்.

மேலும், கட்சி விதிப்படி அதிமுக பொது செயலாளர் மற்றும் துணை பொது செயலாளராக சசிகலாவும், தினகரனும் இருக்கும் நிலையில், அவர்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்குமாறும் கேட்டனர்.

அதிமுகவின் மூன்று வங்கி கணக்குகளையும் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கையாள்வதற்கு தடை விதிக்குமாறும் கோரினர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வங்கிகணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு அதிமுக தலைமைக்கழகத்திற்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, சீலிட்ட கவரில் விபரங்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற விசாரணையில், அந்த ஆவணங்களை ஆராய தங்களை அனுமதிக்க சசிகலா மற்றும் தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், சசிகலாவும், தினகரனும் கட்சியில் உறுப்பினர்களே இல்லாததால் வழக்கு தொடர்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்றும், மேலும், சீலிட்ட கவரில் உள்ளவற்றை பார்க்க அனுமதிக்க முடியாது என்றும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சார்பில் வாதிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், சீலிட்ட ஆவணங்களை பார்வையிடுவது குறித்து சசிகலா மற்றும் தினகரனும், அதனை ஆட்சேபிப்பது குறித்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனும் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Also read... சசிகலா சிறையில் இருந்து வெளி வந்திருப்பது சிலருக்கு தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் - டி.ராஜேந்தர்!

இதன் பின்னர், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்கள் ஆஜராகி அளித்த ஆவணங்கள், சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு தரப்பட்டுள்ளன. இதற்குப் பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவே இல்லை. இந்த வழக்கு தான் தற்போது நிலுவையில் இருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: