• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலத்தைச் சுருக்க முயற்சி - டிடிவி தினகரன் கண்டனம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலத்தைச் சுருக்க முயற்சி - டிடிவி தினகரன் கண்டனம்

டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலத்தைச் சுருக்க முயற்சி நடப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலத்தைச் சுருக்கி தொழில் துறை சார்ந்த உரிமங்களை வழங்க தமிழக அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய நிலத்தைச் சுருக்கி கட்டுமானங்களைச் செய்வதற்கு தமிழக அரசு முயற்சிப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

    உலகம் முழுக்க சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல்லுயிர் பெருக்க மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், அப்படிப்பட்ட இடமான வேடந்தாங்கலை சிதைக்க முனைவது கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு அனுமதியளிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: