ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயலலிதா மரணம் இயற்கையானது... ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் அரசியல்- சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் பேட்டி

ஜெயலலிதா மரணம் இயற்கையானது... ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் அரசியல்- சசிகலாவை சந்தித்த பின் டிடிவி தினகரன் பேட்டி

மாதிரி படம்

மாதிரி படம்

மக்கள் வரிப்பணத்தை அரசியல் காரணங்களுக்காக வீணாக்க அமைக்கப்பட்டது ஆணையம் என டிடிவி தினகரன் குற்றச்சாட்டினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் இயற்கையானது என்றும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் அரசியல் உள்ளதாக சசிகலாவை சந்தித்தப்பின் டிடிவி தினகரன் குற்றச்சாட்டியுள்ளார்.

  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 613 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய விசயங்கள் இடம்பெற்றுள்ளன.

  குறிப்பாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட தகவல்கள் சசிகலாவால் ரகசியமாக வைத்துக்கொள்ளப்பட்டதாகவும், பிரிந்து சென்ற சசிகலாவை மீண்டும் இணைத்த பிறகு, ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையில் சுமுகமான உறவு இல்லையென்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  சசிகலாவைக் குற்றம்சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது. மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவுசெய்து விசாரணைக்குப் பரிந்துரை செய்திருக்கிறது.

  இதையும் படிங்க: மயங்கிய ஜெயலலிதா.. 4 பேர் குற்றவாளிகள்.. பல திடுக் தகவல்களை சொன்ன ஆணையம்! முழுத் தகவல்!

  இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலாவை அமமுக பொதுச்செயலாளரும் சசிகலாவின் உறவினருமான டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

  இதனையடுத்து செய்தியார்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஜெயலலிதா மரணம் இயற்கையானது, சட்ட ரீதியாக சந்தித்த சசிகலா தயார் என்றும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் அரசியல் உள்ளதாக குற்றச்சாட்டினார்.

  ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நேர்மையான அதிகாரி என்றும் எந்த அரசு வந்தாலும் அவர் முன்னிலைப்படுத்தப்படுவார் என பேசினார். மக்கள் வரிப்பணத்தை அரசியல் காரணங்களுக்காக வீணாக்க அமைக்கப்பட்டது ஆணையம் என டிடிவி தினகரன் குற்றாச்சாட்டியுள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Arumugasamy commission, Jayalalithaa Dead, Sasikala, TTV Dhinakaran