சசிகலா விடுதலை தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களைச் சந்திக்க டி.டி.வி.தினகரன் டெல்லி பயணம்

சசிகலா விடுதலை தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசிக்க அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிகாலையில் திடீரென்று டெல்லிக்கு சென்றுள்ளார்.

சசிகலா விடுதலை தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களைச் சந்திக்க டி.டி.வி.தினகரன் டெல்லி பயணம்
டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2020, 2:10 PM IST
  • Share this:
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக எந்தவிதமான பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல், வீட்டிலிருந்தபடியே கட்சிப் பணிகளை கவனித்து வந்தார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் ஆர்.கே நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான டிடிவி தினகரன். இந்தநிலையில், இன்று அதிகாலை சிறப்பு விமானத்தின் மூலம் டெல்லி சென்றுள்ளார்.

டெல்லி சென்றுள்ள அவர் வி.கே.சசிகலா விடுதலை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் சிலருடன் ஆலோசனையில் ஈடுபட சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இதன்மூலம் சசிகலா சிறையிலிருந்து முன்கூட்டியே வெளியே அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.


ஏற்கனவே கடந்த சில நாட்களாக சசிகலா விடுதலை தொடர்பான செய்திகள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ள நிலையில், டி.டி.வி.தினகரன் டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட சென்றுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
First published: September 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading