சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் - தினகரன்

"உடனடியாக ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்வதுடன், போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்"

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும் - தினகரன்
டி.டி.வி.தினகரன்
  • Share this:
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள ஒரு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் 300 க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்று செய்தி வெளியாகியிருப்பதாக கூறியுள்ளார்.

ஊரடங்குநேரத்தில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களிடம் ஊதியம் பிடித்தம் செய்யக் கூடாது என அரசு கூறியுள்ள நிலையில், அரசு மருத்துவமனையிலேயே ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். எனவே, இவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்வதுடன், போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.










Also see...
First published: April 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading