• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Exclusive | தூது அனுப்பினார் பொன்.ராதாகிருஷ்ணன்: டி.டி.வி.தினகரன் பரபரப்பு தகவல்

Exclusive | தூது அனுப்பினார் பொன்.ராதாகிருஷ்ணன்: டி.டி.வி.தினகரன் பரபரப்பு தகவல்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்துமாறு பாஜக நெருக்கடி கொடுத்தாக டி.டி.வி.தினகரன் கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மூலமாக பொன்.ராதாகிருஷ்ணன் தூது அனுப்பினார் என்று நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் டி.டி.வி.தினகரன் பரபரப்பாக பேசியுள்ளார்.

    நியூஸ் 18-னின் முதன்மை செய்தியாளர் குணசேகரனுக்கு, டிடிவி.தினகரன் அளித்த பேட்டியில்,  நெல்லை, குமரி தொகுதிகளில் சிறுபான்மையினரை நிறுத்த பாஜக வற்புறுத்தியது. பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மூலமாக தூது அனுப்பினார் என்றும் இதுவரை நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறினார். கருப்பு முருகானந்தம் டிடிவி-யின் சொந்த மாவட்டமான திருவாரூரைச் சேர்ந்தவராவார்.

    மேலும் கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்துமாறு தொடர்ந்து பாஜக-வினர் நெருக்கடி கொடுத்தனர் எனவும்  டி.டி.வி.தினகரன் கூறினார். இது போல பல்வேறு நிர்பந்தங்கள் தனக்கு பாஜக தரப்பில் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். குமரியில் அமமுக சார்பில் லட்சுமணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் அம்மாவின் தொண்டர்களுக்கும் மக்களுக்கும் மட்டுமே நாங்கள் அடிப்பணிவோம் என்று டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    Also see... ராகுல் பிரதமரானவுடன் கிரண்பேடி புதுச்சேரியிலிருந்து வெளியேற்றப்படுவார்: நாராயணசாமி


    Also see...




    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: