• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • செப்டம்பர் 16-ல் டிடிவி தினகரன் மகள் திருமணம்... திருவண்ணாமலையில் தடல்புடல் ஏற்பாடு..

செப்டம்பர் 16-ல் டிடிவி தினகரன் மகள் திருமணம்... திருவண்ணாமலையில் தடல்புடல் ஏற்பாடு..

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

தனது மகளின் திருமண ஏற்பாடுகளை டிடிவி தினகரன் தீவிரப்படுத்தியுள்ளார். ஜெயஹரிணி- ராமநாதன் துளசிக்கு வரும் செப்டம்பம் 16ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் திருமணம் அடுத்த மாதம் 16ம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வர் கோவிலில் நடைபெறவுள்ளது.

    அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூரைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இருவருக்கு கடந்த ஜூன் 13ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. எனினும்,கொரோனா ஊரடங்கு காரணமாக அதிகம் பேர் பங்கேற்க முடியாது என்பதால் திருமண நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுக்கு உச்ச நீதிமன்ற ஒப்புதல் அவசியம்: சென்னை உயர் நீதிமன்றம்!


    முக்கிய கோவில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனது மகளின் திருமண ஏற்பாடுகளை டிடிவி தினகரன் தீவிரப்படுத்தியுள்ளார். ஜெயஹரிணி- ராமநாதன் துளசிக்கு வரும் செப்டம்பம் 16ம் தேதி காலை 8.30 முதல் 10 மணிக்குள் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோவிலில் அமைந்துள்ள கல்யாண  சுந்தரேசுவரர் சன்னதி புதிய மேடையில் வைத்து திருமணம் நடைபெறவுள்ளது.

    கோப்புப் படம்


    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் டிடிவி தினகரனின் சித்தியுமான சசிகலா தலைமையில் இந்த திருமணம் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் அதிமுக புள்ளிகளும் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    மேலும் படிக்க: தேனுக்கு ஆசைப்பட்டு மர இடுக்கில் சிக்கிய கரடி: உயிரோடு மீட்ட தமிழக வனத்துறை அதிகாரிகள்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: