பயத்தால் முதலமைச்சர் பொறுப்புகளை ஒப்படைக்காமல் வெளிநாடு சென்றிருக்கிறார் இபிஎஸ்.. டிடிவி தினகரன் விமர்சனம்

பயத்தால் முதலமைச்சர் பொறுப்புகளை ஒப்படைக்காமல் வெளிநாடு சென்றிருக்கிறார் இபிஎஸ்.. டிடிவி தினகரன் விமர்சனம்
டிடிவி தினகரன்
  • News18
  • Last Updated: August 28, 2019, 2:08 PM IST
  • Share this:
வெளிநாடு பயணம் செல்லும் முதலமைச்சர் பொறுப்புகளை ஒப்படைக்காமல் சென்றிருப்பது பயத்தின் காரணமாகத் தான் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 

திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “
முதல்வர் வெளிநாடு பயணம் தமிழகத்திற்கு முதலீடை அதிகபடுத்தினால் நல்லது. அது தவறு இல்லை ஆனால் இது அரசியலாக இருக்க கூடாது. ஆளும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்த கட்சியாக இருந்து வருகிறது” என்றார்.


தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்தின் போது பொறுப்புக்களை ஒப்படைக்காமல் சென்றது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,” முதல்வருக்கு உள்ள பயத்தினால்தான். மேலும் அவரது கட்சியினர் மீது அவருக்கு நம்பிக்கை கிடையாது” என்றார்.

அதனைத் தொடர்ந்து அமமுக கட்சியை பதிவு செய்து ஒரே சின்னத்தை பெற முயற்சி செய்து வருகிறோம் என்றும் அப்படி ஒரே சின்னத்தை பெற்றவுடன் தேர்தலை சந்திப்போம் என்றும் கூறினார்.

அதன் பின்னர் தமிழக காவல்துறையினர் குறித்து பேசியவர், “ தமிழகத்தில் அரசாங்கத்தை மீறி காவல்துறை தனது பணியை செய்ய வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும்” என்று கூறினார்.ஒபிஎஸ்  - ஈபிஎஸ் அணி குறித்த கேள்விக்கு, “ ஒபிஎஸ்  - ஈபிஎஸ் அணி உள்ளங்களால் இணையவில்லை. ஏப்ரல் மே மாதங்களில்தான் குடி மராமத்து பணிகளை செய்திருக்க இருக்க வேண்டும் காவிரியில் தண்ணீர் திறந்து விட்ட பின்பு குடி மராமத்து பணி நடப்பது என்பது சாத்தியமில்லாதது” என்றார்.

காஷ்மீர் விவகாரம் குறித்த கேள்விக்கு, “ காஷ்மீர்  விவகாரத்தில் மத்திய அரசு அந்தப் பகுதி மக்களிடம் கருத்து கேட்டு இருக்க வேண்டும். காஷ்மீரை மீட்டதுபோல் கச்சத் தீவையும் மீட்டால் மீனவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என தெரிவித்தார்.

மேலும் பார்க்க...
First published: August 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading