சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை குட்கா டாக்டர் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். மேலும் அவரது வீட்டில் அலிபாபா குகை போன்று தங்கம், வைரம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவினர் புறமுதுகிட்டு ஓடியது போலவே, திருப்பரங்குன்றம் மற்றும் திருவாருர் தேர்தல்களிலும் நடைபெறும் என்று கூறினார். மேலும், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தினகரன் அமைச்சர் விஜயபாஸ்கரை ‘குட்கா டாக்டர்’ எனவும் விமர்சனம் செய்தார்.
டிடிவி தினகரனின் கருத்திற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுடன் தினகரன் அரசியல் முடிவுக்கு வரும் என தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், ஒரு இடத்தில் கூட திமுக காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்காது என்றும் தெரிவித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.