முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மருத்துவப் படிப்பில் 27% ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - திமுக மீது தினகரன் பாய்ச்சல்

மருத்துவப் படிப்பில் 27% ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம் - திமுக மீது தினகரன் பாய்ச்சல்

டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

”இத்தனை ஆண்டுகாலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட பாவத்திற்கு மு.க.ஸ்டாலின் உரிய பரிகாரம் தேட வேண்டும்”

  • Last Updated :

மருத்துவப் படிப்புகளுக்கான ஓபிசி இடஒதுக்கீட்டில், காங்கிரஸ் - திமுக தொடங்கி வைத்த சமூக அநீதியை பாஜக அரசும் தொடர்வதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2007-ம் ஆண்டில் இருந்தே அகில இந்திய மருத்துவ இடங்களில் 27 சதவீத ஓபிசி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

2007- முதல் 2014 வரை மத்திய அரசில் பங்குகொண்ட திமுக, அப்போதெல்லாம் மறந்துவிட்டு, வழக்கம்போல் அதிகாரத்தில் இல்லாத போது அரசியல் செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.

எனவே இத்தனை ஆண்டுகாலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட பாவத்திற்கு மு.க.ஸ்டாலின் உரிய பரிகாரம் தேட வேண்டும் எனவும் தினகரன் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

Also read... இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்க - ராமதாஸ் வலியுறுத்தல்


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see...

First published:

Tags: OBC Reservation