டாஸ்மாக் கடைகள் திறக்கும் அறிவிப்பு மிக மோசமானது - டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம்

டிடிவி தினகரன்

இவற்றைக் கருத்திக்கொண்டு தமிழ்நாட்டிலும் மே 7-ம் தேதி முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படுகிறது’

 • Share this:
  தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மிக மோசமானது என்று டி.டி.வி.தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தவிர பிற இடங்களில் பெரும்பாலும் சிறிய கடைகள் திறந்தன. இந்தநிலையில், மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

  இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், ’இந்தநிலையில், தமிழ்நாட்டையொட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலுள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றைக் கருத்திக்கொண்டு தமிழ்நாட்டிலும் மே 7-ம் தேதி முதல் மதுபானக் கடைகள் திறக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்புக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் (TASMAC) கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மிக மோசமானது - கண்டிக்கத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கில் அதிகரித்து வரும் சூழலில், மதுக்கடைகளைத் திறப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல். துளியும் பொறுப்பற்ற இந்த நடவடிக்கையைப் பழனிசாமி அரசு உடனடியாக திரும்பபெறவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
   

  Also see:
  Published by:Karthick S
  First published: