• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மருத்துவர்களின் குறைகளை வெளியிட்டால் கைது நடவடிக்கையா? டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் கண்டனம்

மருத்துவர்களின் குறைகளை வெளியிட்டால் கைது நடவடிக்கையா? டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் கண்டனம்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

”அரசு நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலே கைது செய்வது என்பது ஜனநாயக நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.”

  • Share this:
    மருத்துவப் பணியாளர்களுக்கான குறைகளை வெளியிட்டதற்காக செய்தியாளரைக் கைது செய்வது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    சிம்பிளிசிட்டி என்ற செய்தி இணையதளத்தை நடத்திவருபவர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன். கோயம்புத்தூரில் மருத்துவர்களுக்கு போதிய உணவு வழங்கபடவில்லை என்று அவருடைய இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். அதனையடுத்து, அந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் இந்தச் செயலுக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு உள்ள குறைகளைப் பற்றி செய்திகளை வெளியிட்டதற்காக கோயம்புத்தூரில் இணையதள செய்தியாளர் ஆண்ட்ரூ சாம் ராஜபாண்டியன் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.


    அவர் மீதான நடவடிக்கையைக் காவல்துறையினர் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். அரசு நிர்வாகத்தில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலே கைது செய்வது என்பது ஜனநாயக நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    அதேபோல, செய்தியாளர் கைது செய்யப்பட்டிருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.







    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: