Home /News /tamil-nadu /

ஜெயலலிதா பெயரை சத்தமில்லாமல் இருட்டடிப்பு செய்கிறது திமுக : டிடிவி தினகரன் கண்டனம்

ஜெயலலிதா பெயரை சத்தமில்லாமல் இருட்டடிப்பு செய்கிறது திமுக : டிடிவி தினகரன் கண்டனம்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்படும் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் சமீபத்தில் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மக்கள் நலத்திட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் பெயரை திமுக அரசு சத்தமின்றி இருட்டடிப்பு செய்து வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது- மக்கள் நலத்திட்டங்களில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வேலைகளை சத்தமில்லாமல் தி.மு.க அரசு மேற்கொண்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

    ஏழை,எளிய மக்கள் பசியாறுவதற்காக அம்மா அவர்கள் கொண்டுவந்த அம்மா உணவகங்களை சீர்குலைப்பதற்கான வேலைகளை ஏற்கனவே தொடங்கிவிட்ட தி.மு.க அரசு, அவற்றை மொத்தமாக மூடுவதற்கு திட்டமிட்டு கருணாநிதி பெயரில் உணவகங்களை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்

    ஒரு பக்கம் "ரொம்பவும்" அரசியல் நாகரீகம் வாய்ந்தவராக தன்னை காட்டிக்கொள்ள,'அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்' என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அவரது அரசு அதற்கு நேர் எதிராக செயல்படுகிறது.

    இப்போது 'அம்மா மினி கிளினிக்'கையும் பெயர் மாற்றம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தி.மு.கவும் திரு.ஸ்டாலினும் மறந்துவிடக்கூடாது.
    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செயல்படும் அம்மா உணவக பெயர் பலகையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் சமீபத்தில் இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு முன்னதாக சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவக பெயர் பலகையை சேதப்படுத்தியதற்காக திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

    தொடர்ச்சியாக, சேலம் நவப்பட்டி ஊராட்சி பொது சேவை மையத்தில் இயங்கும் அம்மா மினி கிளினிக்கில் பெயர் பலகையை எடுத்து விட்டு, 'முதல்வரின் மினி கிளினிக்' என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. அந்த பெயர் பலகையில், தற்போதைய முதல்வர், மறைந்த முன்னாள் முதல்வர், தி.மு.க., தலைவரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: DMK, Jayalalithaa, TTV Dhinakaran

    அடுத்த செய்தி