Home /News /tamil-nadu /

'விளம்பர விளையாட்டில் ஈடுபடும் திமுக அரசு' : தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து டிடிவி.தினகரன் விமர்சனம்

'விளம்பர விளையாட்டில் ஈடுபடும் திமுக அரசு' : தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து டிடிவி.தினகரன் விமர்சனம்

டிடிவி.தினகரன்

டிடிவி.தினகரன்

தமிழ்ப் புத்தாண்டு விவகாரம் தொடர்பாக டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

  தமிழ்ப் புத்தாண்டு என்பதை சித்திரையிலிருந்து தை மாதத்திற்கு தி.மு.க அரசு மாற்றப் போவதாக வெளிவரும் செய்திகள் குறித்து அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும். அப்படி ஏதேனும் திட்டமிருந்தால் அதனைக் கைவிட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

  சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று ஒரு தரப்பினரும் தை ஒன்றாம் தேதியே தமிழ் புத்தாண்டு என்று மற்றொரு தரப்பினரும் கூறிவருகிறனர்.

  1935 -இல் தமிழறிஞர் மறைமலை அடிகளார் தலைமையில் பல அறிஞர்கள், சென்னையில் ஒன்றுகூடி தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என முடிவு செய்து அறிவித்தனர். அதன்படி, திருவள்ளுவரின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக்கூட்டி திருவள்ளுவர் ஆண்டு தமிழாண்டாகக் கொள்வது எனவும் அறிவித்திருந்தார்கள்.

  இந்த நிலையில், கருணாநிதி தலைமையில் அமைந்த தமிழ்நாடு அரசு 1972-ம் ஆண்டு முதல் அரசுப் பயன்பாட்டிலும், ஆவணங்களிலும், திருவள்ளுவர் ஆண்டினை நடைமுறைப்படுத்தி வருகிறது.

  அதிமுக ஆட்சியில் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அரசாணை வெளியிட்டார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய ஜெயலலிதா, தமிழ்ப் புத்தாண்டு, தை மாதம் தொடங்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், சித்திரையில் தொடங்குவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

  தற்போது 10 ஆண்டுகள் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் தமிழ் புத்தாண்டு தொடர்பாக சர்ச்சை எழத் தொடங்கியுள்ளது. இதனிடையே, 2022ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக இம்மாத தொடக்கத்தில் அறிவித்தது. அதில், அதில், சித்திரை 1ஆம் தேதியான ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு என குறிப்பிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

  Also Read ; மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு மாறுகிறதா? பை ஏற்படுத்தும் சர்ச்சை


  பொங்கல் பை


  இதனால் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்னும் கொள்கையில் இருந்து திமுக பின் வாங்கியதா என சிலர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் வழங்கப்படவுள்ள 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பிற்கான துணிப் பை புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி அருகிறது. அதில், இனிய தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள் என அச்சிடப்பட்டிருக்கிறது. எனவே, தை ஒன்றாம்தேதியே தமிழ் புத்தாண்டு என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

  இந்த சர்ச்சை குறித்து திமுக அரசை விமர்சித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

  தமிழ்ப் புத்தாண்டு என்பதை சித்திரையிலிருந்து தை மாதத்திற்கு தி.மு.க அரசு மாற்றப் போவதாக வெளிவரும் செய்திகள் குறித்து அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும். அப்படி ஏதேனும் திட்டமிருந்தால் அதனைக் கைவிட வேண்டும்.

  Also Read : ஜெயலலிதா பெயரை சத்தமில்லாமல் இருட்டடிப்பு செய்கிறது திமுக : டிடிவி தினகரன் கண்டனம்
   கருணாநிதி செய்த இதே போன்ற தவறை, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திருத்தி, மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடுகிறபடி சித்திரை முதல் நாளை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக்கினார்கள்.


  நீட் தேர்வு, 7 தமிழர் விடுதலை, இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை, முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுத்தது உள்ளிட்ட தி.மு.க அரசின் தோல்விகளை திசை திருப்பவே இதுபோன்ற தேவையில்லாத வேலைகளைச் செய்யத் துடிக்கிறார்கள்.


  உண்மையாகவே தமிழை வளர்ப்பதற்கு செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கும்போது அதிலெல்லாம் கவனம் செலுத்தாமல், எப்போதும் போல விளம்பர விளையாட்டிலேயே ஈடுபட்டு தமிழக மக்களை ஏமாற்ற நினைப்பதை தி.மு.க அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.
  Published by:Musthak
  First published:

  Tags: DMK, Pongal, TTV Dinakaran

  அடுத்த செய்தி