அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களை அரசு நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறது - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் உண்மை நிலை என்னவென்று தமிழக அரசு உடனடியாக விளக்கவேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அரியர் தேர்ச்சி விவகாரத்தில் மாணவர்களை அரசு நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறது - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு
டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.
  • Share this:
நீட் தேர்வில் நடந்து கொண்டதைப் போலவே அரியர் தேர்ச்சி விவகாரத்திலும் தமிழக மாணவர்களையும் பெற்றோர்களையும் பழனிசாமி அரசு நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறது என்று டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்புக்கு எதிராக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அனுப்பிய கடிதம் தற்போது வெளியாகி இருக்கிறது. அப்படி ஒரு கடிதமே தங்களுக்கு வரவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்னது எப்படி?

Also read: தனியார்மயமாக்கலை நிறுத்தி அரசுப்பணிகளை பாதுகாக்க வேண்டும் - ராகுல் காந்தி


கோடிக்கணக்கில் செலவழித்து பத்திரிக்கைகளில் விளம்பரங்களை கொடுத்தும், ஊரெங்கும் சுவரொட்டி அடித்தும் ஒட்டிக்கொண்டதில் காட்டிய அக்கறையில் துளியையாவது மாணவர்களின் மீது செலுத்தி அரியர் தேர்ச்சி விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்று தமிழக அரசு உடனடியாக விளக்கவேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
First published: September 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading