புதிய கல்விக் கொள்கை வரைவு மாநில அதிகாரத்தை பறிக்கிறது - தினகரன் குற்றச்சாட்டு!

"தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக கல்வியாளர்கள் குழுவை நியமித்து தமிழகத்திற்கு எனத் தனியான கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்"

news18
Updated: July 27, 2019, 12:17 PM IST
புதிய கல்விக் கொள்கை வரைவு மாநில அதிகாரத்தை பறிக்கிறது - தினகரன் குற்றச்சாட்டு!
டிடிவி தினகரன்
news18
Updated: July 27, 2019, 12:17 PM IST
மத்திய அரசு முன்மொழிந்திருக்கும் புதிய கல்விக் கொள்கை ஒட்டுமொத்தமாக மாநில அரசின் அதிகாரத்தை கேள்விக்குறியாக்கியிருப்பதாக தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் உடனடியாக கல்வியாளர்கள் குழுவை நியமித்து தமிழகத்திற்கு எனத் தனியான கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


அத்துடன், தேசியக் கல்விக் கொள்கை வரைவு ஆவணத்தை நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்து, அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் மற்றும் ஆலோசனைகள் கொண்ட அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தினகரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Also see...

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...