Home » News » Tamil-nadu » TTV DHINANARAN FACTION MLA CONTROVERSIAL SPEECH AGAINST TN ASSEMBLY SPEAKER SA

டிஸ்மிஸ் செய்து கையெழுத்திட்டால் சபாநாயகருக்கு கை இருந்திருக்காது - எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

இந்தியாவிலேயே தமிழகம்தான் ஊழலில் முதல் மாநிலம் என்று கூறிய பிஜேபியுடன் கூட்டணி வைத்து உள்ளார்கள் என்றும் ரெத்தினசபாபதி தெரிவித்தார்.

டிஸ்மிஸ் செய்து கையெழுத்திட்டால் சபாநாயகருக்கு கை இருந்திருக்காது - எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு
எம்.எல்.ஏ ரெத்தின சபாபதி
  • News18
  • Last Updated: March 2, 2019, 9:03 AM IST
  • Share this:
சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தன்னை நீக்கம் செய்து சபாநாயகர் கையெழுத்திட்டால் அவரது கைகள் இருந்திருக்காது என்று கூறியதற்கு பிறகு தான் தன்னிடம் நீக்கம் குறித்து பேசவில்லை என்று அறந்தாங்கி எம்.எல்.ஏ ரெத்தின சபாபதி பேசியுள்ளார்.

அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ரெத்தின சபாபதி டிடிவி தினகரன் ஆதரவாளராக இருக்கிறார். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், ரெத்தின சபாபதி, கலைச்செல்வன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது அதிமுக நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ரெத்தினசபாபதி பேசுகையில், “ஆளும் கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களோடு இருந்தால்தான் எனது தொகுதிக்கு நிறைய நன்மைகள் செய்ய முடியும். இருந்தாலும், ஏன் அங்கு இருக்கவில்லை என்றால் அது துரோக கும்பல் அதோடு இருக்க முடியாது என்று வந்துவிட்டடேன்” என்றார்.


டிடிவி தினகரன்


மேலும், எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரனை இணைக்க முயற்சி செய்ததாகவும் ரெத்தினசபாபதி கூறினார். “டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருக்கும் தங்களை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி விடுவதாக தன்னிடம் தாமரை ராஜேந்திரன் கூறினார்.

அப்பொழுது தன்னை சபாநாயகர் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்கம் செய்து போடும் கையெழுத்துதான் சபாநாயகருக்கு கடைசி கையெழுத்தாக இருக்கும். அதற்குப் பிறகு கையெழுத்து போட கை இருக்காது என்று கூறினேன். பிறகுதான் தன்னுடைய நீக்கத்தை பற்றி பேசவில்லை” என்று பரபரப்பாக பேசினார்.இந்தியாவிலேயே தமிழகம்தான் ஊழலில் முதல் மாநிலம் என்று கூறிய பிஜேபியுடன் கூட்டணி வைத்து உள்ளார்கள் என்றும் ரெத்தினசபாபதி தெரிவித்தார்.

Also See...

First published: March 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading