விஜயகாந்த்தை நாளை நேரில் சந்திக்கிறார் டி.டி.வி.தினகரன்

விஜயகாந்த்தை நாளை நேரில் சந்திக்கிறார் டி.டி.வி.தினகரன்

விஜயகாந்த், டி.டி.வி.தினகரன்

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், டி.டி.வி.தினகரன் நாளை நேரில் சென்று சந்திக்கவுள்ளார்.

 • Share this:
  2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெற்றது. தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரு கட்சிகளும் பலகட்டமாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி முறிந்தது. அதனையடுத்து, டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்தது. அ.ம.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  தி.மு.க, அ.தி.மு.க, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியின் தலைவர்களான மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் நேற்றே வேட்புமனுவைத் தாக்கல் செய்து இன்று முதல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, டி.டி.வி.தினகரனும் நேற்று வேட்புமனுவைத் தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

  இந்தநிலையில், நாளை காலை 11 மணி அளவில் சென்னை கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க அலுவலகத்துக்குச் சென்று விஜயகாந்தை டி.டி.வி.தினகரன் சந்திக்கவுள்ளார். விஜயகாந்த்துக்கு உடல்நலம் சிறப்பான நிலையில் இல்லாததால் அவரால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது. எனவே, இருவரும் சந்திக்கும் புகைப்படங்கள் பிரச்சாரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  உடனடி செய்தி இணைந்திருங்கள்...
  Published by:Karthick S
  First published: