டிடிவி தினகரன் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு

டிடிவி தினகரன்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில், தற்போது 15 பேர் இருக்கிறார்கள். 15 பேரும் அமமுக சார்பில் போட்டியிடுவார்கள்.

 • Share this:
  தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் விருப்ப மனு அளித்துள்ளார்.

  அம்மா மக்கள் முன்றேற்ற கழகம் சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது.

  சென்னை ராப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்கிய விருப்ப மனு வினியோகம் வரும் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட வின்னப்பங்கள் 10ஆம் தேதிக்குள் வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி, விருப்ப மனு கட்டணமாக, தமிழகத்திற்கு 10 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரிக்கு 5ஆயிரம் ரூபாய் வழங்க அறிவிக்கப்பட்டது.

  இந்நிலையில், அமமுகவின் முதல் விருப்பமனுவை முன்னாள் அமைச்சர் பழனியப்பன் டிடிவி தினகரன் பாப்பிரெட்டிபட்டியில் போட்டியிட அளித்துள்ளார்.

  Must Read: அதிமுகவுடன் கூட்டணி இல்லை... அமமுக தலைமையில் புதிய கூட்டணி - டிடிவி தினகரன் அதிரடி

   

  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பழனியப்பன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் தற்போது 15பேர் இருக்கிறார்கள். 15 பேரும் அமமுக சார்பில் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: