Home /News /tamil-nadu /

அடையாறு பகுதியில் உள்ள பள்ளியில் டிடிவி தினகரன் வாக்குப்பதிவு

அடையாறு பகுதியில் உள்ள பள்ளியில் டிடிவி தினகரன் வாக்குப்பதிவு

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் அமமுக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளருமான டிடிவி தினகரன் சென்னை அடையாறு பகுதியில் உள்ள தாமோதரம் நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவுசெய்தார்.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் அமமுக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளருமான டிடிவி தினகரன் சென்னை அடையாறு பகுதியில் உள்ள தாமோதரம் நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவுசெய்தார்.

    வாக்குப் பதிவு செய்தபின்னர் செய்திளாளர்களிடம் பேசிய தினகரன், “அற்போது அரசியலைப் பற்றி பேச விரும்பவில்லை. யார் வெற்றி பெற்றுள்ளார் என்பது வாக்கு எண்ணிக்கை நாளாகிய, மே 2 ஆம் தேதி தெரியவரும்.

    மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். அமமுக இதுவரையில் எப்படி செயல்பட்டதோ அதுபோலவே தேர்தலுக்குப் பின்னரும் செயல்படும்.” என்று கூறினார்.

    Must Read : தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த அரசியல் பிரபலங்கள் ..!

     

    தமிழக சட்டமன்ற தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. காலை 11 மணி நிலவரப்படி 26.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: TN Assembly Election 2021, TTV Dhinakaran

    அடுத்த செய்தி