சுங்கக் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் - மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

டிடிவி. தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

சுங்கக் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், ”கொரோனா பேரிடரைத் தொடர்ந்து சுமார் ஐந்து மாதங்கள் பொது முடக்கத்தால் முடங்கி இருந்த ஏழை மக்கள் இப்போதுதான் பொருளாதாரம் சார்ந்த இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

  Also read: கடும் எதிர்ப்புகளை மீறி நாடு முழுவதும் நடக்கும் JEE தேர்வு

  இந்த நேரத்தில் அவர்களை மறைமுகமாக பாதிக்கக்கூடிய வகையில் சுங்கக் கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது அம்மக்களை மேலும் வேதனைப்படுத்தவே செய்யும். எனவே, உடனடியாக அந்த கட்டண உயர்வை திரும்பப்பெறவேண்டும்.  இன்னும் சொல்லப்போனால், கொரோனா பேரிடர் முழுமையாக நீங்கும் வரை சுங்கக் கட்டணத்தில் ஏதேனும் சலுகை காட்டமுடியுமா என மத்திய அரசு சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.”

  இவ்வாறு தெரிவித்தார்.
  Published by:Rizwan
  First published: