பெண்களை இழிவு படுத்துவதா? உதயநிதி ஸ்டாலினை கண்டித்து டி.டி.வி. தினகரன் ட்வீட்

பெண்களை இழிவு படுத்துவதா? உதயநிதி ஸ்டாலினை கண்டித்து டி.டி.வி. தினகரன் ட்வீட்

டிடிவி தினகரன்

தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார் என்று கூறி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

 • Share this:
  பெண்களை இழிவு படுத்தும் விதத்தில், உதயநிதி ஸ்டாலின் பேசுவதாகக் கூறி,  அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  அந்த பதிவில், “பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார்.

  கண்ணியத்திற்கும் திமுகவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி. நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும்.

  தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி! பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

  சமீபத்தில் தேர்தர் பிரச்சார கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என்று கூறி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Suresh V
  First published: