உண்மையான தர்மயுத்தத்தை நாங்கள்தான் தொடங்கி இருக்கிறோம் என்றும், அமமுக வேட்பாளர் பட்டியல் இம்மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளர்.
அதிமுக அறிவித்துள்ள இலவச சிலிண்டரை அவர்களால் கொடுக்க முடியாது. தற்போது உயர்ந்துள்ள கேஸ் சிலிண்டர் விலையை குறைக்கக் கூட அவர்களால் முடியவில்லை என்று விமர்சித்த தினகரன், இது வெற்று அறிவிப்புகள் என்றார்.
அமமுகவின் பொதுக்கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இம்மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் என்றும், அப்போது வேட்பாளர் பட்டியல் வெளியிபட்டுவதுடன், வேட்பாளர் அறிமுக கூட்டமானவும் அது இருக்கும். அதனைத் தொடந்து தேர்தல் பிரச்சாரம் தொடங்கி நடைபெறும் என்றும் கூறினார்.
Must Read : தி.மு.க ரூ.1,000: அ.தி.மு.க ரூ.1,500 - இந்த திட்டங்களுக்கு ஆண்டுக்கு எவ்வளவு செலவு ஆகும்?
இலவசம் என்ற பெயரில் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றும், கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பதற்கும் வாய்ப்பு இல்லை என்றும் இந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூட்டணி கட்சிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.