பதவி படுத்தும் பாடு... அதிகார மமதையால் என் மீது வழக்கு போடுகிறார்கள் - டிடிவி தினகரன்

பதவி படுத்தும் பாடு... அதிகார மமதையால் என் மீது வழக்கு போடுகிறார்கள் - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

பதவி படுத்தும் பாடு அதிகார மமதையால் ஆளும் கட்சி என் மீது வழக்கு போடுகிறது என்றும் திமுகவுக்கு தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டதால் தபால் வாக்கிற்கு பணம் கொடுத்துள்ளனர் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேவகோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்.

 • Share this:
  பதவி படுத்தும் பாடு அதிகார மமதையால் ஆளும் கட்சி என் மீது வழக்கு போடுகிறது என்றும் திமுகவுக்கு தேர்தலில் தோல்வி பயம் வந்துவிட்டதால் தபால் வாக்கிற்கு பணம் கொடுத்துள்ளனர் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேவகோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்.

  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் டிடிவி தினகரன். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடிக்க தவியாய் தவிக்கிறது. 234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம் எனக்கூறும் திமுக, தபால் வாக்கு பெற காவலர்களுக்கு ரூ 2000 கொடுத்து அவர்களை பணி நீக்கத்திற்கு காரணம் ஆகிவிட்டார்கள். திமுகவிற்கு தேர்தல் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

  மேலும், ஆளுங்கட்சி தலைமையிலான கூட்டணி, பணத்தை மட்டும் நம்பியே தேர்தலை சந்திக்கிறது. துரோகி என்று சொன்னதற்கு என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பழனிச்சாமியை பல்லி, பாம்பு இல்லை. நீங்கள் பச்சோந்தி என்றும், மேலும் பழனிசாமி எனது பெயர் பழனிசாமி இல்லை பொய் சாமி என்றும் கூட கூறுவார் என விமர்சித்தார். பணம் படுத்தும் பாடு இருக்கே பதவி, அதிகார மமதையால் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆறு ஏரி குளங்களை தூர்வாரினார்களோ? இல்லையோ? தமிழ்நாட்டு கஜானாவை காலி செய்து விட்டனர்.

  திமுகவை நம்பியவர்கள் தெருவில்தான் நிற்க வேண்டியது வரும். தப்பித்தவறி ஸ்டாலின் முதல்வரானால் கஜானாவில் ஒன்றுமில்லை, எனவே பொதுமக்கள் சொத்துக்களையும் எடுத்துச் சென்றுவிடுவார்கள். பத்து வருடமாக ஆட்சியில் இல்லை மக்களை சுரண்ட வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர் என விமர்சித்தார்.

  Must Read : மோடியிடம் எடப்பாடி கொடுத்த துண்டுச்சீட்டு; வானதியின் மொழிபெயர்ப்பு - தாராபுரம் பொதுக்கூட்டம் ஹைலைட்ஸ்

  டிடிவி தினகரன்


  தொடர்ந்து பேசிய தினகரன், சிட்டுக்குருவியை பாதுகாக்க சொல்லும் முதல் பிரதமர் தமிழ்நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும். மேலும், காரைக்குடி தொகுதியில் நிர்வாக வசதிக்காக காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாகவும் காரைக்குடியை மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்படும், என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து பிரச்சாரம் செய்தார்.

  செய்திளாளர் : முத்துராமலிங்கம்
  Published by:Suresh V
  First published: