Home /News /tamil-nadu /

Exclusive : ‘3 பைகளில் கொண்டு சென்றது என்ன?’ கடம்பூர் ராஜுவிற்கு எதிரான வீடியோ ஆதாரம் உள்ளது - டிடிவி தினகரன்

Exclusive : ‘3 பைகளில் கொண்டு சென்றது என்ன?’ கடம்பூர் ராஜுவிற்கு எதிரான வீடியோ ஆதாரம் உள்ளது - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

ஆதாரங்களை தினகரன் வெளியிட்டால் அதை எதிர்கொள்ளத் தயார் என்கிறார் கடம்பூர் ராஜூ.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    விஐபிகளிடம் வழங்க அமைச்சர் கடம்பூர் மூன்று பைகளில் கொண்டு சென்றது என்ன என்பது தொடர்பாக, கம்பூர் ராஜுவிற்கு எதிரான வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதை தேர்தல் ஆணையத்திடம் தர இருப்பதாகவும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் பரப்பாகக் காணப்படுகின்றது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

    இந்நிலையில், நியூஸ் 18 க்கு பிரத்யேக பேட்டியளித்த டிடிவி தினகரன், விஐபிகளை பார்க்க 3 பைகளில் கடம்பூர் ராஜு கொண்டு சென்றது என்ன என்பது தொடர்பாக, கடம்பூர் கடம்பூர் ராஜுவுக்கு எதிரான வீடியோ ஆதாராங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதை அவரை சார்ந்த நபரே தனக்கு அனுப்பியதாகவும் கூறியுள்ளார். அந்த ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க இருப்பதாவும் கூறினார்.

    இது குறித்து கூறிய கடம்பூர் ராஜு கூறுகையில், வீடியோ ஆதாரங்கள்  தினகரனிடம் இருந்தால் வெளியிடட்டும் என்றும் அதை நான் எதிர்கொள்ளத் தயார் எனவும் கூறியுள்ளார். மேலும், எந்த நிலையிலும் தான் தடம் மாறிச் சென்றதில்லை என்றும் கூறியுள்ளார்.

    அதிமுகவுக்கும், அமமுகவும் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில், மாறி மாறி குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒரே தொகுதியில் டிடிவி தினகரனும், கடம்பூர் ராஜூவும் போட்டியிடுவதால் இந்த மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

    இதற்கிடையில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ மும்முரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதேதொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் போட்டியிடும் நிலையில் அமமுகவினர் தோல்வி பயத்தால் தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.

    இது குறித்து, அமைச்சர் கடம்பூர் செ ராஜு நியுஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நேற்றிரவு அதிமுக, அமமுக இருதரப்பிலும் ஒரே இடத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தபோது காவல் துறை கேட்டுக் கொண்டதால் நான் என்னுடைய பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, என்னுடன் வந்த வாகனங்களையும் வரவேண்டாம் என்று கூறிவிட்டு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக நான் தனியாக காரில் சென்றேன். ஆனால் அமமுகவினர் எனது காரை வழிமறித்தனர். அதையெல்லாம் கடந்து நான் வந்தேன். அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த வெடியை அமமுகவினர் என் கார் மீது வீசி எறிந்தனர். வாகனம் தீப்பற்றி எரியக்கூடிய சூழ்நிலை இருந்தது. என்னுடைய கார் டிரைவர், எனக்கு தீப்பொறி மேலே விழுந்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.

    அந்த நேரத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பொறுமையை கடைப்பிடித்து வந்தோம். அமமுகவின் அராஜக செயல் மக்களுக்கு தெரியும். மக்கள் முடிவெடுப்பார்கள். என்னுடைய கார் டிரைவர் லாகவமாக காரை ஓட்டவில்லை என்றால் கார் தீப்பிடித்து எரிந்து என்னுடைய உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இதைக்கண்டு நான் அஞ்சப்போவதில்லை. தேர்தல் பணிக்கு வரும் போதே இப்படி அராஜகம் செய்யும்போது, நாளை தொகுதிக்கு பணிக்கு வரும் போது எப்படி நிலை இருக்கும் என்பதை மக்கள் கண்கூடாக பார்க்கிறார்கள். என்னுடைய தேர்தல் பணியை தடுப்பதற்காக கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். ஏனெனில் என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

    Must Read : தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தகுதி அடிப்படையில் வேலை - மு.க.ஸ்டாலின் உறுதி

     

    சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேட்பாளராக நான் இருக்கிறேன். 100% தொகுதி முழுவதும் சிறப்பான பணியாற்றியதால் எளிதில் வெற்றி பெறுவேன். என்னுடைய வெற்றியை தொகுதி மக்கள் தங்களுடைய வெற்றியாக கருதுகிறார்கள். தோல்வியின் பயத்தினால் இப்படிப்பட்ட செயல்களில் அமமுகவினர் இறங்கியுள்ளனர். எதையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன். பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வரவேண்டும் என்று எம்ஜிஆர் கூறியுள்ளார். அதன்படி பணிவோடு மக்கள் பணியாற்றுகிறேன், களத்தில் துணிவோடு பணியாற்ற வேண்டும் என்றால் அதற்கும் நான் தயார்” என கடம்பூர் ராஜூ கூறியிருந்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Kadambur raju, Kovilpatti Constituency, TN Assembly Election 2021, TTV Dhinakaran

    அடுத்த செய்தி