முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன - டிடிவி தினகரன்

உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன - டிடிவி தினகரன்

உக்ரைனில் இந்திய மாணவர்கள்

உக்ரைனில் இந்திய மாணவர்கள்

TTV Dhinakaran : உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிப்பதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையிலான போர் காரணமாக, கடந்த சில நாட்களாக எல்லையில் தவித்து வரும் மாணவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை பத்திரமாக மீட்டு வரவேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவடுவதாக வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், உக்ரைனில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோரை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு இப்பிரச்னையில் கூடுதல் அக்கறைக் காட்டுவது அவசியம். மீட்கப்பட்டு தாயகம் திரும்பும் மாணவர்களுக்கு விமானநிலையத்தில் நின்றுகொண்டு தமிழக அமைச்சரும், அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்பதற்குப் பதிலாக டெல்லிக்குச் சென்று, உக்ரைனில் சிக்கித்தவிக்கும் எஞ்சிய மாணவர்களை மீட்பதற்கான பணிகளை மத்திய அரசோடு இணைந்து மேற்கொள்வதுதான் இப்போதைய உடனடித்தேவை. எனவே, வெற்று விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரில் உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிப்பதால், இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக தகவல்களும், அது தொடர்பான வீடியோவும் வெளியானது. இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தொடர்பாக, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் ஆகியோருடன் பல்துறை முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் போர் நடைபெற்று வரும் உக்ரைனில் உள்ள இந்தியர்களை, அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் போலந்து வழியாக பத்திரமாக மீட்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

Must Read : உக்ரைனுடனான போருக்கு ரஷ்யர்கள் எதிர்ப்பு. 48 ரஷ்ய நகரங்களில் போராடியவர்கள் மீது தடியடி..

அதில் உள்ள சிக்கல்களை அகற்றி, மீட்பு பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் மோடி கேட்டறிந்தார். தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் பூரி, ஜோதிராதித்யா சிந்தியா, கிரண் ரிஜிஜு மற்றும் விகே சிங் ஆகியோரை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள், இந்தியர்களை குறிப்பிட்ட நாடுகளின் எல்லைகளுக்குள் அனுமதிப்பதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக, நேரடியாக அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : ''உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரையும் மத்திய அரசு மீட்கும்'' : பிரதமர் மோடி உறுதி

போரை நிறுத்துவது தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுடன், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும், பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: AMMK, Russia - Ukraine, Tamil student, TTV Dhinakaran