• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சசிகலா காலில் விழுந்தது என் தம்பி என்று கூட சொல்வார் எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன்

சசிகலா காலில் விழுந்தது என் தம்பி என்று கூட சொல்வார் எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

எட்டப்பராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தால்தான் சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க முடியவில்லை என்றும், நவீன எட்டப்பன் எடப்பாடி பழனிசாமி எனவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

  • Share this:
    எட்டப்பராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தால்தான் சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க முடியவில்லை என்றும், நவீன எட்டப்பன் எடப்பாடி பழனிசாமி எனவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

    சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி யில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வீரபாண்டி தொகுதி வேட்பாளர் எஸ்.கே.செல்வம், சேலம் தெற்கு வேட்பாளர் எஸ்.இ.வெங்கடாஜலம், எடப்பாடி வேட்பாளர் பூக்கடை சேகர், சேலம் மேற்கு தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட 11 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

    அப்போது பேசிய அவர், “எட்டப்பராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தால் சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க முடியவில்லை. அர்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் என்பது போல, சசிகலாவை கட்சியில் சேர்க்க முடியாது என்கிறார் அண்ணன் பழனிசாமி. அண்ட புழுகன், ஆகாச புழுகன் என்பதுபோல எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமி புழுகன் என்று புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

    கேப்டன் விஜயகாந்த் சுயமாக ஒரு கட்சி ஆரம்பித்து, ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து எதிர்கட்சி தலைவர் ஆனவர். ஆனால் தற்போது தேமுதிகவிற்கு செல்வாக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எத்தனை கோடிகள் இருந்தாலும், ஆட்சி அதிகாரம் இருந்தாலும், மக்களின் வரிப்பணத்தை சுரண்டியவர்கள் அதற்கான தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.

    உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். 10.5 சதவீதம் என வன்னியர் சமுதாய மக்களை ஏமாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. சாதாரண டெண்டர் முதல் கொரோனா வரை ஆளுங்கட்சி ஊழல் செய்துள்ளது. பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ் வரை அனைத்துத் துறைகளிலும் லஞ்சம்.

    சசிகலா காலில் விழவில்லை என்று சொல்பவர். இனி நான் பழனிசாமி அல்ல குப்புசாமி என்றோ, காலில் விழுந்தது என் தம்பி என்றோ கூட சொல்வார். பழனிசாமி அரசு கஜானாவை காலி செய்து சனிடைசர் போட்டு துடைத்து விட்டது. நவீன எட்டப்பன் எடப்பாடி பழனிசாமி.

    பேய்களை விரட்டி, பிசாசுகளை ஆட்சிக்கு கொண்டுவந்து விடக் கூடாது. திமுகவினர் காய்ந்துபோய் கிடக்கிறார்கள். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொண்டுவர, துரோகிகளை அகற்ற, குக்கர் மற்றும் முரசு சின்னத்தில் வாக்களியுங்கள்.

    எட்டு வழிச்சாலை வந்தால் வளம் பெறாது கமிஷன்தான் பெருகும், மே 2க்கு பிறகு ஆட்சி மாற்றம் நிகழும்” இவ்வாறு கூறினார் டிடிவி தினகரன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: