‘பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கும்...’ பழனிசாமியை பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை - டிடிவி தினகரன்

‘பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்கும்...’ பழனிசாமியை பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

திருநெல்வேலியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆட்சியை விட்டு போகப்போகும் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை என்றும், சிறுபான்மை மக்கள் திமுகவை நம்பாதீர்கள் எனவும் கூறினார்.

 • Share this:
  திருநெல்வேலியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆட்சியை விட்டு போகப்போகும் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை என்றும், சிறுபான்மை மக்கள் திமுகவை நம்பாதீர்கள் எனவும் கூறினார்.

  திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் மகேஷ் கண்ணனை ஆதரித்து தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார், அப்போது அவர் பேசுகையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் திமுக அலை வீசுவதாக கூறுகிறார், பேரலை சுனாமி பேரலை வீசுவதாக தெரிவிக்கிறார். அவர் வாயாலேயே அவர் கெட்டவர் என கூறிவிட்டார் சுனாமி நல்லதா என்ன?

  தீய சக்தி என்பதை சுய வாக்குமூலம் அளித்துள்ளார் ஸ்டாலின். திமுக தீயசக்தி. அவருக்கு வாக்களித்தால் பிரியாணி கடை மட்டுமல்ல டீக்கடை, பஜ்ஜி கடை என எந்தத் தொழிலும் செய்ய முடியாது. கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக, தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் தற்போது வாடுவதற்கு காரணம் திமுக, தமிழகத்தில் நீட் வந்ததற்கு காரணம் திமுக, காவிரி பிரச்னை மீத்தேன் திட்டம் என அனைத்திற்கும் காரணம் திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

  இலங்கை இனப்படுகொலைக்கு காரணம் காங்கிரஸ் கட்சி. விடுதலைப் புலிகளை கொல்ல ஆயுதங்கள் வழங்கியது காங்கிரஸ் அரசு, அதனோடு கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம். திமுக ஆட்சிக்கு வந்தால் கடைகளின் உரிமையாளர்கள் கடைகளின் கல்லாப் பெட்டியில் உட்கார்ந்து இருக்க முடியாது திமுக காரர்தான் அங்கு இருப்பார். திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்து ரவுடியிசம் பெருகிவிடும்.

  ஆட்சியை விட்டு போகப்போகிற எடப்பாடி பழனிசாமியை பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. வெற்றி நடை போடும் தமிழகம் என்கின்றனர், கஜாவை காலி செய்து 5 லட்சம் கோடி 6 லட்சம் கோடி என கடனில் தள்ளாடும் தமிழகமாக உள்ளது. பிரதமருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை.

  ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட எந்த சம்பவத்திற்கும் அனுதாபம் தெரிவிக்கவில்லை. தமிழக மக்கள் பாஜகவிற்கு ஓட்டுப் போடுவதில்லை, அதனால்தான் அனுதாபம் தெரிவிப்பதில்லை. தமிழக மக்கள், தமிழகம் மீது பிரதமர் அக்கறை படுவதே இல்லை.

  திமுதவினர் விஞ்ஞான முறையில் ஊழல் செய்வார்கள் அவர்களையும் அதிமுக வினர் மிஞ்சி விட்டனர். சிறுபான்மை மக்கள் திமுகவை நம்பாதீர்கள். கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியை பாண்டிச்சேரியில் கவிழ்க்க காரணமாக இருந்தவர்கள் திமுகவினர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கும்.

  திமுக சிறு பான்மையினரின் காவலர்கள் என நினைத்து இஸ்லாமியர்கள் வாக்களித்தால் அவர்கள் பாஜக வினருடன் கை கோர்த்து நிற்பார்கள். திமுகவினருக்கு வாக்களித்தால் நமது உடமைகள் எதுவுமே மிஞ்சாது அகதிகளாக வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

  Must Read : திருச்சியில் எம்.எல்.ஏ மகன் காரிலிருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்

   

  ஆர்.கே. நகர் தேர்தலில் டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றினேன் என கூறுவது கட்டுக்கதை. உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும்” இவ்வாறு கூறினார்.
  Published by:Suresh V
  First published: