ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சசிகலாவை சிக்கவைப்பதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது - டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு

சசிகலாவை சிக்கவைப்பதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது - டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Arumugasamy commission : அரசியல் காரணங்களுக்காகவும் சசிகலாவை சிக்கவைப்பதற்காக மட்டுமே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்றும் இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னை ராயபேட்டையில் உள்ள அமமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மண்டல பொறுப்பாளர்களுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதில் மண்டல பொறுப்பாளர்கள் 14 பேர் கலந்து கொண்டனர்.

  ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கட்சியின் வளர்ச்சி குறித்த ஆலோசனை நடைபெற்றதாகத் தெரிவித்தார். மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக 14ஆம் தேதி கர்நாடக அரசை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

  18ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இந்த சுற்றுப்பயணத்தின் போது நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்க இருப்பதாகவும் கூறினார். ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் அதில் என்னால் கருத்து கூற இயலாது என்றும், தனிப்பட்ட விதத்தில் ஓ.ராஜா என்னுடைய நண்பர் அவரை அதிமுகவில் இருந்து நீக்கியது எனக்கு வருத்தம் தான் என்றும் தெரிவித்தார்.

  ஓபிஎஸ் நிதானமானவர் எல்லா முடிவுகளையும் யோசித்து தான் எடுப்பார் என்று கூறிய டிடிவி தினகரன், அரசியல் காரணங்களுக்காக சசிகலாவை சிக்கவைப்பதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்றும், மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதற்காக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெ. ஜெயலிலதா உடல்நலக் குறைவு காரணமாகவே உயிரிழந்தார் என்பதுதான் உண்மை என்றும் கூறினார்.

  மேலும், உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்பு பணியில் மத்திய அரசின் நடவடிக்கை சரியாகவே உள்ளது. தமிழ்நாட்டு மாணவர்களை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசு எந்த வித பாகுபாடும் கட்டவில்லை என்றார். தொடர்ந்து பேசிய தினகரன், சில கட்சிகள் தான் வாக்குகளுக்காக சாதி பாகுபாட்டை உருவாக்கி தேர்தலை சந்தித்திருக்கிறது. சமூக நீதி பேசும் கட்சிகள் தான் சாதி பாகுபாட்டை உருவாக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

  Read More : தொண்டர்களின் ஏக்கங்கள், முழக்கங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் - வி.கே. சசிகலா

  டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபான விலை உயர்வு குறித்த கேள்விக்கு, திமுக ஆட்சிக்கு வருவதற்கு எது வேண்டுமானாலும் செய்வார்கள். முதல்வராவதற்கு முன்பாக இருந்து ஸ்டாலில் வேறு தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வேறு.

  Must Read : ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார் - ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் வாக்குமூலம்

  ஆட்சி நடத்துவதில் திமுகவின் அட்வைஸ் அடுத்தவர்களுக்கு மட்டுமே தனக்கு இல்லை என விமர்சித்த டிடிவி தினகரன் ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதிகளிலும் ஸ்டாலின் "அந்தர் பல்டி ஆகாச பல்டி" அடிக்கிறார். 10 வருடங்களாக திமுக காய்ந்த மாடு போல் இருந்தது. 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடிகள் திமுக கொடியை பிடித்து வெள்ளை சட்டை அணிந்து சுற்றி வருகிறார்கள் என்று விமர்சித்தார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Amma Makkal Munnetra Kazhagam‎, Arumugasamy commission, Sasikala, TTV Dhinakaran