ஏரி குளங்களுக்கு பதிலாக கஜானாவை தூர்வாரி விட்டார்கள் - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

ஆளுங்கட்சியினர் ஆறு, ஏரி மற்றும் குளங்களைத் தூர்வாருவதற்குப் பதிலாக கஜானாவை தூர்வாரி விட்டார்கள் என்றும், உங்களையெல்லாம் விலைக்கு வாங்க ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

 • Share this:
  ஆளுங்கட்சியினர் ஆறு, ஏரி மற்றும் குளங்களைத் தூர்வாருவதற்குப் பதிலாக கஜானாவை தூர்வாரி விட்டார்கள் என்றும், உங்களை எல்லாம் விலைக்கு வாங்க ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.

  இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் அமமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தினகரன் பேசுகையில், “அதிமுகவினர் தொண்டர்களையோ, கூட்டணியையோ அல்லது மக்களையோ நம்பாமல் காந்தித் தாத்தாவை மட்டுமே நம்பியுள்ளனர். பணத்தை கொடுத்து உங்களையெல்லாம் சந்தையில் வாங்குவது போல, ஆடு மாடுகளைப்போல விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்கின்றனர். அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

  அமமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் தமிழ்நாட்டிலுள்ள ஊழல் ஆட்சியை ஒழிக்க முடியும். மக்கள் விரோத ஆட்சியை ஒழிக்க முடியும். இவர்களால் முதியோர் உதவித்தொகையை முறையாகக் கொடுக்க முடியவில்லை.

  அதிமுகவின் அறிவித்துள்ள இலவசங்களை கொடுக்க வேண்டும் என்றார் மாதத்திற்கு 4 ஆயிரம் கோடி ரூபாயும், வருடத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாயும் தேவைப்படும். ஏற்கனவே ஆறு, ஏரி குளங்களைத் தூர் வாருவதற்குப் பதிலாக கஜானாவை தூர் வாரி விட்டார்.” என்றார்.

  இதேபோல திண்டுக்கல்லில் தினகரன் பேசுகையில், “உங்களையெல்லாம் விலைக்கு வாங்க ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சியினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் யோசித்து குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

  Must Read :  'நமது அம்மா' பத்திரிகை வெளியீட்டாளர் சந்திரசேகர் மீது கொலை மிரட்டல் வழக்கு

   

  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாற்றி மாற்றி பேசுகிறார். காமெடி பீஸாகிவிட்டார். என்ன பேசுகிறார் என அவருக்கும் தெரியவில்லை. அவர் பேசுவது யாருக்கும் புரியவில்லை. பேரன் பேத்திகளுடன் விளையாட அவருக்கு ஓய்வு கொடுப்பது தான் நல்லது.” என்று கூறி குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
  Published by:Suresh V
  First published: