”அரசு ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற அலுத்துக் கொள்ளும் எடப்பாடி கம்பெனி” - டிடிவி தினகரன்

நாட்டை முன்னேற்றுவதை விட்டுவிட்டு மதத்தை பற்றியும், சாதியை பற்றியும் பேசுபவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். தேசிய கட்சிகள் நம்மை ஏமாற்றுகின்றன. தமிழகம் அனைத்து துறையிலும் முன்னேறிய மாநிலமாக மாற பரிசு பெட்டகத்திற்கு வாக்களியுங்கள் என டிடிவி பேசினார்.

”அரசு ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற அலுத்துக் கொள்ளும் எடப்பாடி கம்பெனி” - டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் - அமமுக
  • News18
  • Last Updated: April 16, 2019, 7:57 AM IST
  • Share this:
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவை ஆதரித்து அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மேடவாக்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பேசிய  போது திமுக - காங்கிரஸ் கூட்டணி மதசார்பற்ற கூட்டணி என்றால், நாமெல்லாம் மதசார்புள்ள கூட்டணியா ? என்ற கேள்வியை எழுப்பினார்.

தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் டி.டி.வி.தினகரன்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பேசிய போது பழனிச்சாமி (கம்பெனி) ஆட்சியையும், இந்தியாவை வஞ்சிக்கிர மோடி ஆட்சியையும் முடிவுக்கு கொண்டுவரும் வகையில் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒன்றாக வந்துள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி மதசார்பற்ற கூட்டணி என்றால், நாமெல்லாம் மதசார்புள்ள கூட்டணியா ? என்ற கேள்வியை எழுப்பினார்.


மோடி இந்துக்களுக்கு பாதுகாவலர் என கூறி, இந்துக்களை  இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டார்.

ஸ்டாலின் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என்று கூறுவது போன்று ஸ்டாலின் குரலில் டிடிவி.தினகரன் பேசினார். ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக டெப்பாசிட் கூட வாங்காததற்கு காரணம் சிறுபான்மை மக்களை ஏமாற்றியதுதான்.

மோடி கொண்டு வந்த ஜிஎஸ்டி-யால் வியாபாரம் பாதிப்பு, தொழிற்சாலைகள் மூடப்பட்டது, வேலை வாய்ப்புகள் இல்லாமை, மீனவர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.”நெசவாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எடப்பாடி கம்பெனியால் பாடுபடுகிறார்கள். அவர்கள் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற, என்னமோ அவரது அப்பா விட்டில் இருந்து எடுத்துவந்து கொடுப்பதுபோல் அலுத்துக்கொள்கிறார் எடப்பாடி” என  டிடிவி கூறினார்.

நாட்டை முன்னேற்றுவதை விட்டுவிட்டு மதத்தை பற்றியும், சாதியை பற்றியும் பேசுபவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். தேசிய கட்சிகள் நம்மை ஏமாற்றுகின்றன.

நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறும் ராகுல்காந்தி காவேரியில் மேகதாது அணை கட்டமாட்டேன் என்று கூற முடியுமா ? அவரால். அவர் பேசும்போது ஸ்டாலின் அருகில் அமைதியாக அமர்ந்திருக்கிறார்.

எட்டு வழிச்சாலை திட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் மத்திய அமைச்சர் நித்தின்கட்கரி அதை கொண்டு வருவோம் என பேசுகிறார். எடப்பாடி பழனிச்சாமியும் அருகில் இருந்து கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தார். ஏனென்றால் அவருக்கு பயம் ஆட்சி போய்விடுமோ என்று எடப்பாடிக்கும், பன்னீர் செல்வத்திற்கும், 33 அமைச்சர்களுக்கும் பயம்.

முன்னதாக ஏமாற்றியவர்களையும், தற்பொழுது ஏமாற்றியவர்களையும் முடிவுக்கு கொண்டு வாருங்கள்.
புதிய மாற்றத்திற்காக வழிவகை செய்யுங்கள். தமிழகம் அனைத்து துறையிலும் முன்னேறிய மாநிலமாக மாற பரிசு பெட்டகத்திற்கு வாக்களியுங்கள் என டிடிவி பேசினார்.

Also Watch: கனிமொழிக்கும் தூத்துக்குடிக்கும் என்ன சம்மந்தம்? - கனிமொழி பதில்!


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
First published: April 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading