ஜெயலலிதாவின் உண்மையான நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க உறுதி ஏற்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘ஏழை-எளியவர்களுக்கு வாரிக்கொடுத்த வள்ளல், தீய சக்திகளால் வெல்லவே முடியாத வெற்றி நாயகர், அறிஞர் அண்ணாவின் இதயக்கனி, அடித்தட்டு மக்களின் நலனை முதன்மையாக கொண்டு ஆட்சி புரிந்த பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் இன்று (நேற்று).
மேலும் படிக்க...காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன்
இந்நாளில் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் எம்.ஜி.ஆரை வணங்கி, அவர்களது வழியில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கிட உறுதி ஏற்றிடுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TTV Dhinakaran