அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வி.கே.
சசிகலா அணிக்கு வழங்க தோ்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஆஜரானாா். அவரிடம் அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணை நடத்தினா்.
விசாரணை முடித்து இன்று சென்னை திரும்பிய டி.டி.வி.தினகரன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘11 மணிநேரம் விசாரணை நடத்தியது அவர்களின் கடமை. எங்களை டெல்லி போலீஸ் கைது செய்த போது எங்களிடம் அது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
அதன்பிறகு தற்போது சுகேஷ் சந்திரசேகரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது என்னை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் விசாரணையில் வாய்க்கு வந்ததெல்லாம் கூறியுள்ளார்.
மீனவர்களுக்கு விரைவில் கூட்டுறவு வங்கிகள்- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வி.கே.சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு குறித்து கேட்டதற்கு, அதிமுக முக்கிய நிர்வாகிகள் இது குறித்து பேசுவதை நானும் பார்த்தேன். இது குறித்து சசிகலா முடிவு எடுத்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.