Home /News /tamil-nadu /

பிப்ரவரி 7ஆம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா: டி.டி.வி. தினகரன் தகவல்

பிப்ரவரி 7ஆம் தேதி தமிழகம் வருகிறார் சசிகலா: டி.டி.வி. தினகரன் தகவல்

சசிகலா

சசிகலா

தொண்டர்கள் பொறுமையாக இருங்கள் மற்றவற்றை நானும், சசிகலாவும் பார்த்துக் கொள்வோம் என்றார் தினகரன்.

    சசிகலா பிப்ரவரி 7-ஆம்தேதி தமிழகம் நோக்கி வர இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

    மதுரையில் செய்தியாயர்களிடம் பேசிய தினகரன், “தமிழ்நாட்டு எல்லையில் இருந்து வீடு அடைகின்ற வரை யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல், இருபுறமும் அமைதி காத்து, ராணுவ வீரர்களை போல அமைதி காத்து சசிகலாவை வரவேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    சசிகலா பெயருக்கும், எனது பெயருக்கும் களம் விளைவிக்கும் வகையில் யாரும் நடந்துக் கொள்ளக் கூடாது. சசிகலா வருகிறார்கள் என்றதும் பலருக்கு ரசாயன மாற்றங்கள் நடந்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும் என்று கூறிய தினகரன், ஜெயலலிதாவின் நினைவிடத்தை அவசர அவசரமாக திறந்தார்கள் என்றும், சசிகலா என்கிற பெண்சிங்கம் தமிழகம் வரும்போது இங்கே உள்ளவர்கள் எவ்வாறு பிதற்றுக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் எனவும் கூறினார்.

    ஜெயலலிதாவின் திருப்பெயரை தாங்கி இருக்கும் அமமுக என்ற ஜனநாயக ஆயுதத்தை நாங்கள் தொடங்கி இருப்பது அதிமுகவை மீட்டெடுக்க த்தான் என்று கூறினார்.

    தீய சக்தியாக திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுக்க, அனைவரும் ஒற்றுமையாக இருந்து சின்னம்மா வழியில் ஆட்சியை அமைக்க வேண்டும். நடப்பவை எல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டிருங்கள். பொறுமையாக இருங்கள்.

    சிலர் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்கள் யார் தவறு செய்தவர்கள், யார் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டி இருக்கிறார்கள்.அதனால் நீங்கள் யாருக்கும் பதில் கூறி உங்கள் நேரத்தை வீணாடிக்க வேண்டாம்.

    மேலும் படிக்க.... அன்றே சொன்னார் அண்ணா: லடாக் எல்லை விவகாரம் நீண்டகால போருக்கு வழிவகுக்கும்...

    ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலா மூலம், உண்மையான ஆட்சியை உருவாக்குவோம். தொண்டர்கள் பொறுமையாக இருங்கள் மற்றவற்றை நானும், சசிகலாவும் பார்த்துக் கொள்வோம், சட்ட ரீதியாக போராடி அதிமுகவை சின்னம்மா மீட்டெடுப்பார்கள் என்று டி.டி.வி. தினகரன் அப்போது தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Sasikala, TTV Dhinakaran

    அடுத்த செய்தி